Re: [INDOLOGY] [MinTamil] தொல்காப்பியம் பற்றிச் சில கேள்விகள் ... இரண்டாம் பகுதி ...
rajam
rajam at earthlink.net
Tue May 15 01:19:22 UTC 2018
வணக்கம் திரு nkantan.
ஆரியர் வடமொழி என்றெல்லாம் போகவேண்டாம். நமக்குக் கிடைத்திருக்கும் நூல்களை அகச்சான்றாக வைத்துப் பார்ப்போம்.
உங்களுக்குத் தமிழார்வம் இருப்பதால் எழுதுகிறேன்.
///தொல்காப்பியத்திற்கு அப்பெயர் ஏன்?///
என்ற உங்கள் கேள்விக்குத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் கொடுத்துள்ள விளக்கத்தையும் தெரிந்துவைத்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு ஒரு ‘வீட்டுப்பாடம்’ ;-) . தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமை மயங்கியல் நூற்பா 33 ("வேற்றுமை மருங்கில் போற்றல் வேண்டும்") பார்க்கவும்.
‘தொல்காப்பியம்' என்பது ‘ஆகுபெயர்’ என்கிறார் இளம்பூரணர்: ‘தொல்காப்பியனால் செய்யப்பட்டது தொல்காப்பியம்.'
> On May 13, 2018, at 11:26 AM, nkantan r <rnkantan at gmail.com> wrote:
>
> நான் இந்த இழையில் எழுதுவது மிக அதிகப்ர்ஸங்கித்தனமே.
>
> நான் முறையாக உயர்நிலை த் தமிழ் கற்றவனேயல்லன். பள்ளியில் தமிழை ஒரு பாடமாக பரிட்சைக்காக படித்தவன்.
>
> பின் ஏன் இவ்விழையில்... என்ற கேள்வி எழலாம். ஒரு முட்டாள்தனமான தைரியம். , ஒரு தைரியமான முட்டாள்தனம்.. இரண்டும் இங்குண்டு..
>
> சரி.. விஷயத்திற்கு வருவோம்.
>
> தொல்காப்பியத்திற்கு அப்பெயர் ஏன்? பனம்பரனார் ஆசிரியர் /ஆக்கியவர் தொல்காப்பியன் என்கிறார்.. தன் பெயருக்கேற்ப..
>
> .....ஐந்திரம் நிறைந்த
> தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி..'
>
> அது அவரின் இயர்பெயரா என்றால் சந்தேகம் தான். ஏனென்றால்..
>
> '...மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி..'
>
> அதாவது, வளரும் மொழியில் புதுமை வருவது இயல்பே. அப்படியே வட மொழி, மற்ற மொழிகளின் தாக்கத்தில் மாற்றமும் எற்பட்டிருக்கும். இப்போது எப்படி தனித்தமிழ், கிரந்தம் இல்லா தமிழ் என்று பலர் தொங்குகிறார்களொ அப்படியெ அப்போதும் இருந்திருக்கும்.
>
> ஆக, பழைய இலக்கண நூல் (அகத்தியம்??) கற்ற, வட மொழி இலக்கணமும் அறிந்த, தமிழ் இலக்கண மரபைக் காக்க வந்தவர். தொல்காப்பியன் (தமிழ்க்காவலன், முத்தமிழ் கலைஞன். என்றெல்லாம் நாம் அடைமொழி தருவது போல்..) என்ற சிறப்பு பெயர் பெற்றவராய் இருக்கலாம்..?
>
>
> காப்பு +இயம் அதனால் காப்பியம் என்றால், மற்ற ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறுகாப்பியங்களும் எதைக்காக்கின்றன? அவற்றைக் காப்பியங்கள் என்று பட்டியல் இட்டவர் யார்?... பார்ப்போம்..
>
> rnk
>
> (ஆரியர் இந்தியாவில் வந்தபோது என்றால்? அந்த 'இந்தியாவின்' எல்லை எது? ஆமாம், அந்த ஆரியர் வந்த காலம் எது? தமிழர் எப்பொது இந்தியாவில் வந்தார்?
>
> தொல்காப்பியம் எழுதப்பட்டபோது தமிழகத்தில் நான்கு மறைகளும் இருந்த்தன. 'அதங்கோட்டாசான்' எனும் சொல்லால் அதைக் கற்பித்தவன் என்பதும் தெரிகிறது.. வட மொழி தாக்கம் புலவரிடையே மரபைக் கூறவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி யதால் விளைந்ததோ
> தொல்காப்பியம்??)
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil at googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe at googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
> To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe at googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://list.indology.info/pipermail/indology/attachments/20180514/dbb21dde/attachment.htm>
More information about the INDOLOGY
mailing list