நான் இந்த இழையில் எழுதுவது மிக அதிகப்ர்ஸங்கித்தனமே.
 நான் முறையாக உயர்நிலை த் தமிழ் கற்றவனேயல்லன். பள்ளியில் தமிழை ஒரு பாடமாக பரிட்சைக்காக படித்தவன்.
பின் ஏன் இவ்விழையில்... என்ற கேள்வி எழலாம். ஒரு முட்டாள்தனமான தைரியம். , ஒரு தைரியமான முட்டாள்தனம்..  இரண்டும் இங்குண்டு..
சரி.. விஷயத்திற்கு வருவோம்.
தொல்காப்பியத்திற்கு அப்பெயர் ஏன்?  பனம்பரனார் ஆசிரியர் /ஆக்கியவர் தொல்காப்பியன் என்கிறார்.. தன் பெயருக்கேற்ப..
.....ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி..'
அது அவரின் இயர்பெயரா என்றால் சந்தேகம் தான்.  ஏனென்றால்..
'...மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி..' 
அதாவது, வளரும் மொழியில் புதுமை வருவது இயல்பே. அப்படியே வட மொழி, மற்ற மொழிகளின் தாக்கத்தில் மாற்றமும் எற்பட்டிருக்கும். இப்போது எப்படி தனித்தமிழ், கிரந்தம் இல்லா தமிழ் என்று பலர் தொங்குகிறார்களொ அப்படியெ அப்போதும் இருந்திருக்கும். 
ஆக, பழைய இலக்கண நூல் (அகத்தியம்??) கற்ற, வட மொழி இலக்கணமும் அறிந்த, தமிழ் இலக்கண மரபைக் காக்க வந்தவர். தொல்காப்பியன் (தமிழ்க்காவலன், முத்தமிழ் கலைஞன். என்றெல்லாம் நாம் அடைமொழி தருவது போல்..) என்ற சிறப்பு பெயர் பெற்றவராய் இருக்கலாம்..?
காப்பு +இயம் அதனால் காப்பியம் என்றால்,  மற்ற ஐம்பெருங்காப்பியங்களும்  ஐஞ்சிறுகாப்பியங்களும் எதைக்காக்கின்றன? அவற்றைக் காப்பியங்கள் என்று பட்டியல் இட்டவர் யார்?... பார்ப்போம்.. 
rnk
(ஆரியர் இந்தியாவில் வந்தபோது என்றால்?  அந்த 'இந்தியாவின்' எல்லை எது? ஆமாம், அந்த ஆரியர் வந்த காலம் எது?  தமிழர் எப்பொது இந்தியாவில் வந்தார்? 
தொல்காப்பியம் எழுதப்பட்டபோது தமிழகத்தில் நான்கு மறைகளும் இருந்த்தன. 'அதங்கோட்டாசான்' எனும் சொல்லால் அதைக் கற்பித்தவன் என்பதும் தெரிகிறது.. வட மொழி தாக்கம் புலவரிடையே மரபைக் கூறவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி யதால் விளைந்ததோ 
 தொல்காப்பியம்??)
-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: 
http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: 
http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to 
minTamil@googlegroups.comTo unsubscribe from this group, send email to 
minTamil-unsubscribe@googlegroups.comFor more options, visit this group at 
http://groups.google.com/group/minTamil--- 
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit 
https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to 
mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit 
https://groups.google.com/d/optout.